Show all

திமுக போராட்டம்! சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்குக

சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கும் போதிருந்தே அவர் மீதான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசுக்கு எதிரான அவரின் முயற்சியால் அவர் மீது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

உயர் சிறப்புத் தகுதி என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசின் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டும் செல்லும் வகையாக, மாநில அரசை மீறி சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. மாநில நிதிஉரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதலாம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

உயர் சிறப்புத் தகுதி என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசின் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டும் செல்லும் பணியை சூரப்பா பார்த்து வருவதாகவும், இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதனிடையே உயர் சிறப்பு தகுதி பெறுதலான முன்னெடுப்பில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும் கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக்கொள்ளலாம் என்றும் சூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாகும். 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவையும் மாநில அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணியினர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்ககோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.