செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழகக் கிளைத்தலைவர் எல். முருகன் தன் அடையாளத்தை தெளிவாகக் காட்டியுள்ளார். 30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் தமிழ்மக்களின் இதயங்களை வருடிக் கொண்டிருக்கிற இரண்டு பேரலைகள் ஒன்று சூரப்பா சூழ்ச்சி பற்றியது. மற்றொன்று விஜய்சேதுபதியின் அறியாமை பற்றியது. ஒட்டுமொத்த தமிழ்நாடும், நமது மாணவக் கண்மணிகளுக்கு இருக்கிற ஒரே ஆறுதல், எதிர்காலத்தில் நாமும் பொறிஞர் ஆகி விட முடியும் என்று நம்பிக்கை தருகிற சென்னை அண்ணா பல்கலைக்கழகமே ஆகும். அதற்கும் ஒரு ஆப்பை தயாரிக்க முயன்ற சூரப்பா மீது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் கோபத்தில் இருக்கின்றனர். ஆளும் அதிமுகவே கூட சூரப்பாவின் சூழ்ச்சியைக் கண்டிருத்திருக்கிறது. சூரப்பாவின் சூழ்ச்சி குறித்தும், சூரப்பாவிற்கு ஆளும் அதிமுகவின் கண்டனம் குறித்தும் http://www.news.mowval.in/News/tamilnadu/Spider-9062.html என்ற இணைப்பில் காணலாம். தமிழ்மக்களின் இதயங்களை வருடிக் கொண்டிருக்கிற அடுத்த பேரலை விஜய் சேதுபதியின் அறியாமை பற்றியது. உலகத்தமிழர்கள் தமிழின விரோதியாக கருதுகிற இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதை தமிழ் மக்களின் சார்பாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும், திரைப்படத் துறையினரும், தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜகவின் தமிழகக் கிளைத்தலைவர், எல்.முருகன் தனது தமிழர் விரோத முகத்தை காட்டியிருப்பது நமக்கு வருத்த மளிப்பதாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை, சுதந்திரமாக செயல்பட விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம்சாட்டிய எல்.முருகன், சுதந்திரமாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். அடுத்து முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் உரிமை என்பதால், அதை ஏன் தடுக்க வேண்டும்? என்றும் எல்.முருகன் கேள்வியெழுப்பினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



