Show all

இதுலே எல்லாம் நம்ம தமிழ்நாட்ட அடிச்சிக்க முடியாது! 24 மணி நேர கொரோனா உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது- இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு, மருந்துகள் உட்பட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது 24 மணி நேர கொரோனா உதவி எண்களை அறிவித்துள்ளது தமிழக அரசு.

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமில்லாமல் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தற்போது கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.

30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நடுவண் அரசு அறிக்கை அளித்து இந்தியாவும் கொரோனாவிற்கு இலக்காகி விட்ட சோகத்தை தெரிவித்திருக்கிறது. 

சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு, மருந்துகள் உட்பட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த நுண்ணுயிரி தாக்கினால் 2 விழுக்காடு மட்டுமே உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் தொற்று தாக்காது என்றும், தாக்கினாலும் எளிதில் குணப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில்  24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை:-
044-29510400
044-29510500
94443 40496
87544 48477
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மேற்காணும் தொலைபேசி எண்களில்  பொதுமக்கள் தொடர்புக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ குழுவினர் உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதித்து- நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.