Show all

உயிரிழந்த சோகம்! தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீக்குளித்தவர்

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்  அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக்  கண்டித்து தீக்குளித்த பெரியாண்டிகுழியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

போராட்டங்களுக்கான தீர்வே இன்னும் எட்டப் படாத நிலையில், தலைவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்ட ஆளும் அதிமுக அரசின் அடாவடி ஒருபக்கம், கட்சி நிருவாகியின் தீக்குளிப்பு மறு புறம் என்று, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,805. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.