Show all

‘கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்’ எடுத்துவர சீனாவிற்கு இந்திய விமானம் அனுப்பப்பட்டுள்ளது

கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது. 

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா நுண்ணுயிரியின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14792ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 957 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நடுவண் நலங்குத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 488 பேர் உயிரிழந்த நிலையில், 2015 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 

சீனாவில் இருந்து கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கிலிருந்து கடந்த 10 நாட்களில், 170 டன் அளவிலான பொருட்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தக் கிழமையில் கூடுதலாக 300 டன் மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏர் இந்தியாவின் டீ-787 விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சுவா நகருக்குச் சென்ற புறப்பட்டுச் சென்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.