தினகரன் அணி நீட் தேர்வுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. நடுவண் அரசு திமுகவுக்கு வைத்த முற்றுகையால் ஆடிப் போய் விட்டார் தினகரன்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். நாங்களோ ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். உச்சஅறங்கூற்று மன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்துவிட்டதால் நாளை எங்களால் அதை நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டத்திற்கு பிரச்சினை இல்லை என நினைத்து திமுக அதை நடத்தியிருக்கலாம். என்றும், தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு, நடுவண் அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது நடுவண் அரசு. எனவே அவர்கள் அதை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. என்றும் தினகரன் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



