Show all

சித்தார்த் நச்! காந்தி காங்கிரஸ் அல்ல; பாஜக நமது இராணுவம் அல்ல

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய கருத்துப்பரப்புதலைத் தொடங்கியுள்ளன. 

இன்று சென்னையில்; மோடி ஆற்றிய உரையில்: மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கிய போது அவரை மீட்டோம். அபிநந்தனை 2 நாட்களில் மீட்டோம் என்பது உலகுக்கே தெரியும் என்று குறிப்பிட்டார்.

சென்னையில் மோடி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நடிகர் சித்தார்த் தனது கீச்சுப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைக்குப் பிறகு காந்தியார் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவரது பெயரை காங்கிரஸ் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டதோ, அதே போல புல்வாமா மற்றும் அபிநந்தன் திரும்பியதை  பாஜக பயன்படுத்திக்கொள்கிறது. 

காந்தியார் காங்கிரஸ் அல்ல. பாஜக நமது இராணுவம் அல்ல. இதை யார் மக்களுக்கு விளக்குவது? இந்தியா பொய்களை எதிர்க்க வேண்டும். இவ்வாறு நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.