22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேமுதிக: சில பல நிபந்தனைகளோடு பேசுவதால், திமுக கூட்டணியிலும் இடம் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இடம் இல்லை என்பதாகத் தெரிகிறது. ரெண்டு பக்கமும் பேச்சு: தேமுதிகவுக்கு போச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வைக்கிறார்கள். கூட்டணி குறித்து ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவிடம் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியது, இரு கட்சி தலைவர்கள் நடுவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணையும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிகவின் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில், தேமுதிகவின் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். துரைமுருகனைச் சந்தித்த பின்னர் தேமுதிக நிர்வாகிகள், தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக கூறி விட்டு சென்றனர். எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஒரே நேரத்தில், இரண்டு பக்கமும் தேமுதிக பேசியது, திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேமுதிகவின் இரட்டை நிலைப்பாடு தெரிய வந்ததை தொடர்ந்து, இன்றைய சென்னை பாஜக பொதுக்கூட்ட மேடையில் இருந்து விஜயகாந்த்தின் படம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த கோபத்தில் தான் தேமுதிகவுடன் பேசி வந்த நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல், இதழியலாளர்களைச் சந்திப்பதை தவிர்த்து விட்டார். இதற்கிடையே திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக்கூறினார். அதற்கு ஸ்டாலின் ஊரில் இல்லை. கொடுக்க தொகுதிகளும் இல்லை என பதில் அளித்துவிட்டேன். வீட்டிற்கு வந்த தேமுதிக நிர்வாகிகளிடமும் இதனையே கூறினேன். தேமுதிகவிற்கு கொடுக்க எங்களிடம் போதிய தொகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கூட்டணி சேரும் கட்சிகள் ஆதரவு தரலாமேயொழிய, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யவியலாது அதாயம் கருதாத அதிமுக தொண்டர்களுக்கு தொகுதி தேவையாய் இருக்கிறது. நாற்பதும் எங்களுக்குத் தேவை என்கிறார் தினகரன். மக்கள் நீதி மையம் மட்டுந்தான் மீதியிருக்கிறது. தேமுதிக என்ன செய்யப் போகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,083.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.