08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாட்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, 3 மாவட்டக் காவல்துறையினர் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால், காவல்துறையினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசியபோதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருப்பதால், தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, காவல்துறையினர் தாக்கியதிலும், துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சற்று நேரத்திற்கு முன்பு ஒருவர் மட்டும் பலியாகியிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது. ஒருவரின் பெயர் அந்தோணி என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் விவரம் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர் 3 பேர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



