Show all

ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வருவது எப்படி! தமிழக மக்கள் கவலை

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஒரு மாணவி உட்பட எண்மர் பலியாகி விட்ட நிலையில் முதல்வர் மக்களை அமைதியாக இருக்கும் படி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

போராட்டக்காரர்கள், தன்னிச்சையாக ஆளாளுக்கு முடிவு எடுத்து போராடும் நிலைக்கு காவல்துறை துப்பாக்கிச் சூடு காரணமாகி விட்டது.  

களத்தி;ற்கு அமைச்சர்கள் செல்லாமல் காவல்துறையை வைத்தே கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளுக்கான காலம் கடந்து விட்டது. 

தமிழக அரசோ, நடுவண் அரசோ ஸ்டெர்லைட் ஆலையை மூடிட உறுதியான உறுதிமொழி எதுவும் தராத நிலையில் எண்மர் உயிர்ப் பலி என்கிற மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கிற போராட்டக்காரர்களை சமாதானப் படுத்துவது எளிதன்று. 

தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களும். துணை முதல்வர் பன்னீர் அவர்களும் உடனடியாக போராட்டக்காரர்கள் பாதிக்கப் பட்ட களத்திற்கு சென்று விரைவாக உறுதியான தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.