08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த போராட்டக்களத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் மண்டை உடைந்து காயம் அடைந்து நடுச்சாலையில் விழுந்து கிடக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். காவல்துறையால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டு அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை சூறையாடினர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலகம் புகை மண்டலமானது. போராட்டச் செய்திகளைச் சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் பாய்ந்தது. காவல்துறையினர் செய்தியாளர்களைத் தாக்கி படக்கருவிகளை பறித்து அத்துமீறலில் ஈடுபட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



