Show all

எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் தெளிவான வடிவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! இதுவே வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம் என்கிறார்கள்.

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் தெளிவான வடிவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! இதுவே வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம் என்கிறார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது. அமைதியாக நடந்த இந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள் அதனைக் கண்டிக்கும் முகமாக தமிழகத்தின் மற்ற இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் மிக முதன்மைக் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். சட்டமன்றத்தில், நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அங்கு போராட்டம் செய்யும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கேரளாவில், நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதல் முறையாக தீர்மானம் இப்படி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் புதுச்சேரியிலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி தீர்மானத்தை தொடர்ந்துதான் இந்த போராட்டம் தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்திலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் நடந்த காவல்துறையினரின் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக கூட்டணியில் இருக்கும் மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க்கவில்லை. நிதிஷ் குமார் போன்றவர்கள் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் அதிமுக இப்படி தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக தமிழகத்தில் கூட்டணியை வைத்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் வருமா என்பது கேள்வியே. ஆனால் இந்த தீர்மானம் நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் நிற்காது என்றும் கூறுகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.