தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்தியக் காவல் பணித்துறை பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத்தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைக் கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி நிகழ்வைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழக அரசு நடுவண் அரசுக்கு அதற்கான அழுத்தம் தரக்கோரியும் தமிழம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்துக்கு அபய்குமார் சிங், நெல்லை மாவட்டத்துக்கு மகேஷ் குமார் அகர்வால், முருகன், திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டத்துக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு சிறப்பு அதிகாரிகளையும் சட்டம்- ஒழுங்கு காவல்துறை துணைத்தலைவர் ஒருங்கிணைத்து செயல்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்தியக் காவல் பணித்துறை பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத்தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



