Show all

எச்.இராஜா சொல்கிறார்! தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதானாம்

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி மக்கள் திடிரென்று இன்று காலையில் அனைவரும் கிளர்ந்தெழுந்து ஸ்டெர்லைட் நமக்கு வேண்டாம்; அதன் பொருட்டு நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என்று கிளம்பிருந்தால் கூட அவர்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காக சுட்டு வீழ்த்த முடியாது. 

மக்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்தம் குறைகளைத்தான் கேட்டிருக்க முடியும். 

தொன்னூற்று ஒன்பது நாட்களாக போராட்டம் நடத்தி அரசு மக்கள் கோரிக்கையை மதிக்காத நிலையில், நூறாவது நாளாக இன்று முன்றுகைப் போராட்டம் நடத்தும் போது அதை அதிகாரிகள் எதிர் கொள்ளாமல், ஆட்சியர் எதிர் கொள்ளாமல், ஜெயக்குமார் போன்ற முந்திரிக் கொட்டை அமைச்சர்கள் எதிர்கொள்ளாமல், யோகம், தவம் எல்லாம் செய்து துணைமுதல்வர் பதவியை கைப்பற்றியிருக்கிற பன்னீர் எதிர் கொள்ளாமல் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் எதிர்கொள்ளாமல், காவல் துறை நேரடியாக மக்களை மார்பிலே சுட்டு வீழ்த்துவது தவிற்க முடியாதது எப்படி ஆகும்; திட்டமிட்டதாகவல்லவா அது சுட்டப்படும். 

இந்தத் துப்பாக்கிச் சூட்டை தவிற்க முடியாது என்பதே மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றம். 

ஆனால் இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அடப்பாவி நீ எல்லாம் என்ன பிறவியாக இருப்பாய் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.