08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் கேவலர்கள் என்றும் கேவலச்சிகள் என்றும் ஒரு பட்டியல் இருக்கிறது. அவர்களுடைய நிழற்படங்கள், கருத்துக்கள், பேட்டிகள், தகவல்கள், புள்ளி விவரங்கள் எதை கவனித்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதில் எச்.ராஜா, தமிழிசை, சுப்பிரமணியசாமி தொலைக்காட்சியில் விவாத மேடைகளில் தலைகாட்டும் பாஜக புள்ளிகள் என்பவர்கள் எல்லாம் இந்தப் பட்டியலில் வருபவர்கள். தமிழ் மக்கள் பிக்பாஸ் புகழ் ஜுலியையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே பிக்பாஸ் ஜுலியும் வெட்கப் படாமல் ஏதாவது புதிய புதிய சிந்தனைகளை உதிர்த்த வண்ணமாகவேயிருக்கிறார். அண்மைக் காலமாக நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று தொடர்ந்து காணொளி வெளியிட்டார் ஜுலி. இந்த நேரத்தில் கீச்சுவில் ஜுலி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருக்கும் பக்கத்தில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, நீங்களும் ஜுலியுடன் அரசியலில் இறங்கினால் உங்களை நாங்கள் முதலமைச்சர் ஆக்குவோம் என்று பதிவு செய்துள்ளனர். அதற்கு கஸ்தூரி, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



