தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய அறைகூவல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய அறைகூவல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் எப்படி கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கின்றன என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் மூலம்தான் இப்போது பாதிப்புகள் அதிகம் ஆகி வருகின்றன. இவர்கள் எல்லாம் தமிழகத்தில் எல்லையிலேயே சோதனை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு கிழமையாக கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 93 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய விமான சேவை மூலம் பலர் தமிழகம் வந்துள்ளனர். கடந்த ஒரு கிழமையில் 942 பேர்கள் இந்த வகையான பாதிப்பாளர்களே. இவர்கள் எல்லோரும் தமிழர்கள். தங்கள் குடும்பத்தை பார்க்க இவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் மூலம் தமிழகத்திற்கு உள்ளே கொரோனா ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்திற்கு இன்னும் பெரிய அறைகூவலான பாடு என்னவென்றால், தமிழகத்திற்கு தற்போது அன்றாடம் 25 விமானங்கள் வருகின்றன. இதன் மூலம் கொரோனா பாதிப்புகள் நிறைய வர வாய்ப்புள்ளது. இப்படி தமிழகம் வரும் நபர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். விமான நிலையத்தில் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கண்டிப்பாக கொரோனா பரவலை தடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



