Show all

ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானம் வழங்கிய தமிழாசிரியர்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியாத்தம் பிச்சானூர்  பகுதியில், 86 அகவை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவர் தான் வாழ்ந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார். 

இந்த நூலக கட்டடத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ஏ. ராமன் அவர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து நடராசனுக்கு தமிழக அமைச்சர்கள் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.