Show all

ஆட்சி கலைப்பு என்று தீயாய் பரவிய புரளி

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால் இது வழக்கமான நிகழ்வு தான் என்று தமிழக காவல்இயக்குனர் ராஜேந்திரன் மறுத்துவிட்டார்.

ஆனால் திடீர் உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது.

இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின.

ஆனால் இதனை மறுத்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. உள்துறை செயலாளரை ஆளுநர் சந்தித்ததாக சொல்வதில் உண்மையில்லை என்றும் ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.