அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா ஆலோசனையில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகமானது. உடனே சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீயாக பரவின. திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின. தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டமன்றம் முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன. இந்த வதந்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்திலேயே காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இது ஒரு வழக்கமான நிகழ்வு தான், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் காவல்துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன் விளக்கம் தந்தார். பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாலியனை திருப்பி அனுப்பாமல் காவல்துறை கண்காணிப்பாளர்களும், ஆணையர்களும் வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்ததால் அனைவரையும் அந்தந்த கம்பனிகளுக்கு பட்டாலியன்களுக்கு திருப்பி அனுப்பத்தான் இந்த உத்தரவு. இது வழக்கமாக அனுப்பப்படும் கடிதம்தான் என தகவல் வெளியான பின்னரே தமிழகத்தில் பரபரப்பு ஓய்ந்தது. ஆனாலும் நிறைய பேருக்கு இன்னும் நம்பிக்கை எற்படவில்லை ஏதாவது நடக்கும் என்றே பேசிக் கொள்கிறார்கள்; ஆட்சி கலையவேண்டும் என்னும் ஆர்வமோ என்னவோ.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



