Show all

மாற்றுக் கட்சியினரும் கொண்டாடும் மாமனிதர்; எதிர்க்கட்சியினரும் பாராட்டும் இணையில்லா தலைவர், என்பவர்தான் வைகோ.

தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், ஈழப் போரில் அப்போதைய நடுவண் காங்கிரஸ் அரசின் துரோகங்கள் குறித்து பேசியதால், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வைகோவிற்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 10ஆயிரம் ருபாய் அபராதமும் என்று சிறப்பு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் செய்தியாளர் ஒருவர் வைகோவின் கைது குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி, தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்த அவர் இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,206.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.