Show all

ரூ.36000000 ஊழல்; துவரம் பருப்பு கொள்முதலில்; ஒரு அமைச்சர் கூட தப்ப முடியாது: தினகரன்அணி புகழேந்தி பேட்டி

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடிமைப் பொருள் விநியோகத்திற்காக துவரம் பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.360 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் செய்யும் ஒரு அமைச்சர் கூட எங்களிமிருந்து தப்ப முடியாது என்று தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஏழை மக்கள் பயன்பெற, குடும்ப அட்டைகளுக்கு துவரம் பருப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் துவரம் பருப்பு கொள்முதலில் பெரும் ஊழல் புரிந்துள்ளனர்.

ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.63க்கு வழங்க பல நிறுவனங்கள் தயாராக இருந்த போதிலும், ரூ.73க்கு கொள்முதல் செய்கிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.10 கூடுதலாக கொடுப்பதால் மாதம் 20 ஆயிரம் டன் வீதம் கடந்த 18 மாதங்களில் ரூ.360 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

தரமான நிறுவனங்கள், குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளி வழங்கியும், அதிக விலை கொடுத்து, துவரம்பருப்பை வாங்க வேண்டிய அவசியம் என்ன? துவரம் பருப்பு மட்டுமல்லாமல் குழந்தைகள் சாப்பிடும் முட்டையிலும் ஊழல் செய்து வருகின்றனர். இதுபோல ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் சொல்வேன். தமிழகத்தில் ஊழல் செய்யும் ஒரு அமைச்சர்கூட எங்களிடம் இருந்து தப்ப முடியாது' என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.