Show all

அறங்கூற்றுவர் கிருபாகரன் தாக்கு! நாமக்கல் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல்படுகின்றனவாம்

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அறங்கூற்றுவர் கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.

அவர் பேசியதாவது, நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுகின்றன. 

மருத்துவர், பொறியாளர் படிப்புகளில் சேர வேண்டும் என குழந்தைகளை பல லட்சங்கள் கொடுத்து பள்ளியில் சேர்க்கின்றனர். 

அப்படிப் படித்தும் மருத்துவர், பொறியாளர் படிப்புகளில், இடம் கிடைக்காமல் கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். இவ்வாறு அறங்கூற்றுவர் கிருபாகரன் பேசினார்.

நீட்டுக்குப் பிறகுதானே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வில்லை யென்று தற்கொலைகள் நிகழ்ந்தன. இதிலே தனியார் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல் படுவதற்கும், மாணவர்கள் கனவு கலைவதற்கும் என்ன சம்பந்தம்? 

நீட் தேர்வுக்கு முன்பு வரை தான் அந்தக் கோழிப் பண்ணை நடவடிக்கைகள் எல்லாம்! இப்போது அந்த வகை தனியார் பள்ளிகள் எல்லாம் நீட் தேர்வை நமது மாணவர்களை எப்படி எதிர் கொள்ள வைப்பது? அதுவும் குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை எதிர் கொள்வது எப்படி? என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஏதோ பழைய தகவலை வைத்துக் கொண்டு, அவலை நினைத்து உரலை இடித்த கதையாக பாவம் அறங்கூற்றுவர் கிருபாகரன் பேசியிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.