23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனுஷ் நடித்த, வடசென்னை மற்றும் மாரி2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதன் சற்றுமுன் கீச்சு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பட விளம்பரம் தயாராகிவிட்டதாகவும், இந்தப் படத்தை அடுத்த மாதம் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் காதல் கலந்த அதிரடி படம் என்று சொல்லப் படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.