Show all

தயாரிப்பாளர் ஆகிறார் நடிகை அமலாபால்! அவர் விரும்பும் அந்தக் கதை படமாகியே தீர வேண்டுமாம்

கடவர் என்றால் இலத்தின் மொழியில் பிணமாம். நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது. அதில் அமலாபால் தடயவியல் மருத்துவராக நடிக்கிறார்.

தான் தயாரிப்பாளர் ஆனது எதனால் என்று தெரிவிக்கிறார் அமலாபால்: 'இந்தப் படத்தின் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கேட்டேன். இந்தப் படத்தை குறைந்த பொருட்செலவில் எடுக்க முடியாது. புதிய இயக்குநரை நம்பி யாரும் பெரிய பொருட்செலவில் தயாரிப்புக்கு வரமாட்டார்கள். ஆனாலும் கதையை என்னால் விட முடியவில்லை. நடிகையாக இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

என்னைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த சக தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு அதரவாக இருக்க விரும்பினேன். அதனாலேயே நானும் தயாரிப்பாளர் ஆனேன். இன்னும் பலபடங்களில் இணையவும் உறுதியேற்றுள்ளோம்.

இயக்குநர் ஆனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்துள்ளனர். எங்களது முதல் தயாரிப்பு மேல்தட்டு மட்டத்திலும் வசூலைக் குவிக்கும் என்று நம்புகிறோம். 

இதுவரை பார்த்திராத கேட்டிராத பல புதிய விசயங்களைப் கொண்;ட கதையாக இருக்கும் கடவர். இதில் நான் தடயவியல் மருத்துவராக நடிப்பதற்கு நிறைய தயாராக வேண்டி இருந்தது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜனோடே ஓர்ம குறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

கதாபாத்திரத்திற்கு தயாராவதற்கு அந்தப் புத்தகத்தை படித்ததோடு மட்டுமில்லாமல் அந்தத் தொழிலைப் பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன். ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்கிறார் தயாரிப்பாளர் அமலாபால்;

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.