இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவி என்று ஒரு கேளொலியின் அன்பு வேண்டுகோள் இணையத்தில் வலம் வருகிறது. 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தைப் பொறுத்த வரை- கொரோனா நமக்கு வந்து விடக்கூடாது என்கிற அச்சத்தை விட- கொரோனா வந்துவிட்டால் அரசின் பாதுகாப்புக்குச் சென்றுவிடுவோமே என்கிற அச்சம் மிக மிகத் தூக்கலாக இருப்பது- கொரோனா பரவலுக்கு மிக முதன்மையான காரணமாக இருக்கிறது. அப்படி அஞ்சுகிறவர்கள் அரசின் பாதுகாப்புக்குச் செல்லாமல், கொரோனா அறிகுறி இல்லாததால் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டதைக்கூட ஒப்புக் கொள்ளாமல், பம்பி பம்பி நிறைய போருக்கு கொரோனாவை பரப்பி விடுகின்றார்கள். நமக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை அனைவருக்கும் தேவை. பாதுகாப்பில்லாமல் அனைவரோடும் பழகிவிட்டு அரசின் பாதுகாப்புக்குச் சென்றுவிடுவோமே என்று ஒளிந்து திரிவது மிக மிக ஆபத்தானது. சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கிறோம் என்று, அரசு முன்னெடுக்கும் இடையிடையே ஊரடங்கு மிகப் பெரிய தலைவலி. சென்னைக்கு வந்;து வேலை செய்கிறவர்கள் இந்த இடைப்பட்ட ஊரடங்கில் சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஓராயிரம் வழிகளைச் சிந்தித்து செந்த ஊரில் கொரோனா பரப்ப எப்படியாவது சென்று விடுகின்றார்கள். கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தாலும், மாநிலம் விட்டு மாநிலம் வருவபவர்களையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறவர்களில் மிக மிக குறைந்த பேர்களே பரிசோதனை எடுத்து அனுமதி வாங்கிய பின்பே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். ஆனால் பலர் அனுமதி பெறாமல் பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அவரவர் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களையும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் புலனத்தில் ஒரு வேண்டுகோள் தியாகி வருகிறது. குறிப்பிட்ட அந்தக் கேளொலியில்- சென்னையில் இருந்து வரும் சகோதர, சகோதரிகளே உங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு அன்பு வேண்டுகோள், சொந்த ஊருக்குத் திரும்பும் முன் உங்களை பரிசோதனை செய்து விட்டு கொரோனா இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுங்கள். கொரோனா இல்லையென்றால் மட்டும் உங்கள் ஊருக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் பரிசோதனை மேற்கொள்ளாமல் குறுக்கு வழியில்தாம் ஊருக்கு வருகின்றனர். அதனால் நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, உங்கள் அக்கம்பக்கத்தினர், உங்கள் தெருவில் உள்ளவர்கள் என அனைவரும் பாதிப்படைகிறார்கள். மாவட்ட எல்லையில் உங்களை நீங்கள் பரிசோதனை செய்து முடிவு தெரிந்த பின் வாருங்கள், அதுவே இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவி என அந்த கேளொலியின் அன்பு வேண்டுகோள் இணையத்தில் வலம் வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



