11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் என்கிற கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்டு நமது அம்மா நாளிதழ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக தினகரன் வசம் சென்று விட்ட நமது எம்ஜியாருக்கு போட்டியாகத் தொடங்கப் பட்டுள்ளது. இதில் வெளியான கட்டுரை ஒன்றில், அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்; இரண்டு கட்சிகளின் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என கட்டுரை வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர்களோ, ஒரு கட்டுரையின் அடிப்படையில் கூட்டணியை தீர்மானிக்க முடியாது என உடனே மறுப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில், இப்படியான ஒரு கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; கட்டுரை கட்சியின் முடிவு அல்ல் கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அஇஅதிமுக எப்போதும் இல்லை. பாஜக, அதிமுக கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அதில் வெளியீடான கட்டுரையோ முடிவு செய்ய முடியாது. என்று நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக செயல்படாமல் இருந்த நமது அம்மா நாளிதழின் சமூக வலைதளங்கள் இந்த விளக்கத்தை திடீரென வெளியிட்டுள்ளது. இதனிடையே நமது அம்மா நாளிதழில் இந்தக் கட்டுரை வெளியானதற்காக பணியாளர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜக- அதிமுக கூட்டணிஅமைந்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் வழக்கு தொடரலாமா என்றும் பேச்சு அடிபடுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,767.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



