11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் அரசியல் கட்சியினரின் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. இதனிடையே, இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன் முடிவுகளை, அந்த தொலைக்காட்சி இன்று வெளியிட்டது. இதில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களையும், பாஜக 89 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களையும், பிற கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களில் வென்றது. பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,767.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



