11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் பாராளுமன்றம் அருகே ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இருந்து 10, 20 மற்றும் 50 புதிய ரூபாய்தாள்கள் அன்றாடம் வினியோகிக்கப்படுகிறது. புதிய ரூபாய் தாள்களைப் பெற, ஆதார் எண் மற்றும் தாங்கள் பெற விரும்பும் ரூபாய்க்கு நிகரான பழைய ரூபாய்தாள்களைக் கொடுக்க வேண்டும். ஒருவர் மாதத்துக்கு 3 முறை இவ்வாறு புதிய பணக்கட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். புதிய ரூபாய் தாள்கள் மணமக்களுக்கு கொடுக்கவும், தலையாய நபர்களுக்கு பணமாலை அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் புதிய ரூபாய்தாள் வைத்திருப்பது தனிப் பெருமிதந்தான். எனவே புதிய ரூபாய் தாள்கள் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி முன் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர். இப்படி பெறும் புதிய ரூபாய் தாள்களை பெரும்பாலானோர் கழிவு அடிப்படையில் விற்பனை செய்கிறார்கள். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கூட கழிவு பெறப்படுகிறது. கழிவு முகவர்கள் ரிசர்வ் வங்கி அருகில் நின்றுகொண்டு, புதிய ரூபாய் தாள்கள் வேண்டுமா? என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணத்தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில், புதிய ரூபாய் தாள்களின் வணிக பரிமாற்றம், மக்களிடையே அதிர்ச்சியையும் பணமதிப்பு நீக்கம் செய்த மோடி அரசின் மீது கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,767.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



