17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பும், நையாண்டியும் தெரிவித்து வருகிறது. ரஜினியை பொறுத்தவரை திரைப் படத்தில் தான் அவர் கதைத்தலைவர். சமூக மதிப்பீட்டில் அவர் நையாண்டிக்கான மனிதர்தான். அவரை எதிர்த்தெல்லாம் போராடி தங்கள் மதிப்பை குறைத்து கொள்ளும் வகையிலான பகடி அமைப்புகள் ஏதும் தமிழகத்தில் இல்லை. ரஜினி வீட்டிற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கியிருப்பது ரஜினியின் கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்கிற உள் நோக்கம் குறித்ததாக கருதப் படுகிறது. இத்துடன் ரஜினி வீட்டை பார்க்க வரும் ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



