Show all

ரஜினி சந்திப்பு; ஆறுதல்; நிதியுதவி! தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை, இந்தப் போராட்டத்திற்கு பலவகையிலும் ஒத்துழைப்பாய் இருந்த வைகோ, இதுவரை ஸ்டெர்லைட்டோடு தொடர்பில்லாத  கமல்ஹாசன், திருமாவளவன், கட்சி வகையாக ஸ்டெர்லைட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தான் என்று குற்றச்சாட்டு உள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், அதிகாரிகளை வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்த  துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆகியோர் சந்தித்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் 100 கார்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டார். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன், 10 கார்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். போக்குவரத்தைக் காவல்துறையினர் சீர்படுத்தினர். மருத்துவமனைக்கு வந்த ரஜினியைத் தூத்துக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குமாரவேலு பாதுகாப்புடன்  உள்ளே அழைத்துச் சென்றார். சிகிச்சை பெற்று வரும் 48 பேர்களிடமும் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு ரஜினி நிதியுதவி வழங்கினார். 

ரஜினியைப் பொறுத்தவரை எடப்பாடி அரசு சொல்லுகிற தொபுக்கடீ என்று குதித்து,  திடீரென்று தாக்கிய பத்தாயிரம் பேர்கள், படீரென்று மறைந்து விட்ட கட்டுக்கதையை நம்புகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.