Show all

நோட்டாவிற்கு அடுத்த இடம் கிடைக்கும்! தமிழர்விரோத சக்தியாக அரங்கேற முயலும் ரஜினிக்கும்

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டம் நடந்தது; தீர்வு கிடைத்தது. திரும்ப அதே போன்று போராட்டம் தமிழர்கள் அடுத்த உரிமைக்காக நடத்தி விடக்கூடாது. தமிழர் உரிமைகளை முடக்கி வைத்திருக்கிற தமிழ் விரோத சக்திகளின் நோக்கம் இதுதான்.

போராட்டம் நடத்துகிற தமிழர்கள் எல்லோருமே சமூக விரோதிகள் என்பதுதான் தமிழ் விரோத சக்திகளின் கருத்து. அப்படிச் சொன்னால் அதுவே நியாயமாகி விடக் கூடும் என்பதற்காக, தமிழர் நடத்தும்; போராட்டங்களில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று சொல்லுவதை ஒரு யுக்தியாக அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக இருப்பது தான் சமூக நியாயம். உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினால் தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் என்ற தலைப்பில் ஒடுக்குவார்கள். 

தமிழர் போராட்டங்களை கொச்சைப் படுத்துகிற அனைவருமே தமிழ்விரோத சக்திகள் அல்லது நம்மாட்களாக இருந்தால் அவர்களின் எடுபிடிகள்தாம்.    ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்களைச் சந்தித்து விட்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் ரஜினி. 

நீங்கள் யார்? இப்போதுதான் வழி தெரிந்ததா? என்ற காவல்துறையால் பாதிக்கப் பட்ட ஓர் இளைஞரின், ரஜினி எதிர்பார்த்திராத கேள்வியால் ரஜனி கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

மக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

தூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். சல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரே அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

சமூக விரோதிகள் காவல்துறையிரைத் தாக்கினர். ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை வெளியே கொண்டு வந்து காட்ட வேண்டும். சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்தனர். இதன் பிறகு தான் பிரச்னை தொடங்கியது. மக்கள் (அதாவது போராடும் தமிழர்களே சமூக விரோதிகள் என்ற தொனியில்) எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போனால், தமிழ்நாடு சுடுகாடாகிடும். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி தமிழ்விரோத சக்தியாக தமிழகத்தில் தன்னை அரங்கேற்ற முயல்கிறார். தமிழர்கள் நோட்டாவிற்கு அடுத்த இடத்தை அவருக்கும் வழங்குவார்கள்;. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.