16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட் கிழமை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒருமாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் மூன்று மாதங்களுக்குள் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். தமிழில் ஏதோ கதையே இல்லாதது போல ஹிந்தி படத்தின் மறு பதிப்பாக வருவதுதான் தமிழ் திரையுலகத்திற்கான தோல்வி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



