Show all

கொரோனாவை கண்டறிய ராஜலட்சுமி கல்வி குழுமத்தினர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

கொரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் இது உலகெங்ஙகும் வேகமாக பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுவருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் திருப்புமுனை தரும் ஒரு மென்பொருளை ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் மாணவர் குழுவும் பேராசிரியர் குழுவும் இணைந்து உருவாக்கியுள்ளது.


செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த மென்பொருள் கோவிட்-19, சமூக தொற்று வாயிலான நிமோனியா, மார்பு எக்ஸ்ரேவை கொண்டு உடலின் நிலையை கண்டறிய முடியும். 14,148 படங்கள் பயன்படுத்தப்பட்ட இச்சோதனை முறையின் துல்லியத்தன்மை  95.4% ஆகும். 

மென்பொருளின் முக்கியத்துவங்கள்:

  • இன்ஸ்டலேஷன் அவசியமில்லை. இது ஒரு எளிமையான, எங்கிருந்தும் இயக்க கூடிய நடைமுறை
  • சமூக தளங்களில் பதிவேற்றுவதை போன்று எளிதில் பதிவேற்ற முடியும்
  • பதிவிட்ட மறு நொடியில் முடிவை அறியலாம்
  • இந்த மென்பொருளின் துல்லியத் தன்மை 95.4%

டாக்டர் எஸ். ராஜ் குமார், பேராசிரியர் மற்றும் தலைவர், உயிரி மருத்துவ பொறியியல் துறை
டாக்டர்  வி.சப்தகிரிவாசன், பேராசிரியர், உயிரி மருத்துவ பொறியியல் துறை
திரு.வி.ராஜாராமன், உதவி பேராசிரியர், சிஎஸ்இ
திரு.அஷ்வின்  ரமேஷ், சிஎஸ்இ மூன்றாம் ஆண்டு மாணவர்

ஆகியோர் அடங்கிய குழு மென்பொருளை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய அனைவரும் ராஜலட்சுமி கல்வி நிறுவனத்தின் மெடிக்கல் இமேஜிங் மையத்தின் அங்கம் ஆவர்.

கோவிட்-19 வைரசை கண்டறிய தங்கள் குழு உருவாக்கிய மென்பொருள் மிகவும் பெருமை தருவதாக ராஜலட்சுமி கல்வி நிறுவன நிர்வாகத்தில் இருப்பவரும் ரேடியாலஜிஸ்டுமான டாக்டர் ஹரீ எஸ் மேகநாதன் கூறுகிறார்.மிகக் குறுகிய காலத்தில், இரவு பகலாக வேலை செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயன்மிக்க, துல்லியமான இந்த மென்பொருளை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் ஹரீ எஸ் மேகநாதன் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த சமூகத்திற்கு உதவ தங்கள் குழுமம் ஆர்வத்துடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.சிஎஸ்இ(CSE) மூன்றாமாண்டு மாணவர் திரு.அஷ்வின் ரமேஷ் கூறுகையில், உலகிற்கே ஆபத்தாக உள்ள கோவிட்19 கண்டறியும் மிகப்பெரிய திருப்புமுனையில் தானும் ஒருவராக இருப்பதால் பெருமை கொள்வதாக தெரிவித்தார். இதற்காக கல்விக்குழும நிர்வாகத்திற்கும் பேராசியர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.