Show all

கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு சொலவடையுண்டு. உண்மையிலேயே கிருஷ்ணகிரியை, அந்த சொலவடைக்கு உட்படுத்தியுள்ளதா கொரோனா

கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் கோரத்தாண்டவம் ஆடினாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு நபருக்கு கூட கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதனால் இந்த மாவட்டத்தை பச்சை மண்டலமாக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்னும் இடத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று கிருஷ்ணகிரிக்குத் திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா சென்று திரும்பிய அவரது குடும்பத்தினர் 3 பேரும், உறவினர்கள் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் யார் யாருடன் எல்லாம், தொழில், வணிகம், வேலை, சொந்த பந்த உறவு என்றெல்லாம் தொடர்பில் இருந்து, (“கிழிந்தது கிருஷ்ணகிரி” என்று ஒரு சொலவடையுண்டு.) அந்த சொலவடைக்கு உண்மையிலேயே கிருஷ்ணகிரியை உட்படுத்தி பாடாய்படுத்தப் போகின்றார்களோ என்று தமிழக மக்கள் அங்கலாய்கின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.