Show all

கனமழையா? சுட்டெரிக்கும் வெப்பமா! மூன்று நாட்களாகப் பேசப்பட்டு வருகிற 'பனிப்புயலின் திசையே' தீர்மானிக்கும்

கடந்த மூன்று நாட்களாக பேசப்பட்டு வந்த புயல் திசைமாறுவதால், மழைக்கு மாறக வெப்ப ஆபத்து இருப்பதாக இன்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார். மழை வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கடற்கரையை விட்டு புயல் விலகி செல்வது பெரும் ஆபத்தானது. நம் மக்கள் உண்மையாகவே பாவம் என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி தற்போது வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுவாகி புயலாக மாறியது.
தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக கடற்கரைகளில் இருந்து 1400 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலைகொண்டுள்ளது. தற்போது இந்தப் புயல் நகரும் பாதையை பார்த்தால், தமிழகத்தை நெருங்காமலேயே புயல் சென்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் புயல் தமிழகத்தை நெருங்குவதற்கோ அல்லது கரையை கடப்பதற்கோ வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நாளை இது உறுதியாக தெரியும் என்று கூறினார். சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் 
தமிழ்நாடு வெதர்மேன் இரண்டு நாட்களுக்கு முன்னர், 'வர இருக்கும் புயல் தமிழகத்தில் வறட்சியை போக்கினால் பிரச்னை இல்லை' என்று கூறியிருந்தார்.
ஆனால், புயல் திசைமாறுவதால் மழைக்கு மாறக வெப்ப ஆபத்து இருப்பதாக இன்று பிரதீப் ஜான் இன்று பதிவிட்டுள்ளார். மழை வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கடற்கரையை விட்டு புயல் விலகி செல்வது பெரும் ஆபத்தானது. நம் மக்கள் உண்மையாகவே பாவம் என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புயல் வராமலேயே இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர் கடந்த 200 ஆண்டுகளில் இருமுறை மட்டுமே அதிக வெப்பம் காரணமாக புயல்கள் வேறு திசையில் சென்றுள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு புயல் திசை மாறியது. இதனால், 45 டிகிரி செல்சியல் வெப்பம் கொளுத்தியதால் இந்தியாவில் 1000 பேர் உயிரிழந்தனர் என்று பதிவிட்டுள்ளார். எனினும், நாளைதான்  புயல் செல்லும் பாதை உறுதியாக தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கரைப்பகுதியில் இருந்து 150 கி.மீ தொலைவு வரை புயல் நிலை கொண்டிருந்தால் ஓரளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 300 கி.மீ தொலைவில் புயல் கடந்தால் தரைப்பகுதியில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும். இதனால், வெப்பக்காற்று அதிகமாக வீசும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,135.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.