தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகும் அதில் விசால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அவர் தலைவராகப் பொறுப்பேற்ற போது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று புகார் தெரிவித்தனர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விசால் இருந்துவருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மாதங்களுக்கு முன்பு எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,135.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.