Show all

நடிகர் ஆனந்தராஜ் கடும் எச்சரிக்கை! வெற்றி பெறப்போகும் நடிகர் சங்க அணிக்கு.

தேர்தலே முடியவில்லை, கட்டிடம் கட்டத் தொடங்கவே இல்லை அதற்குள் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாறை கொண்டு இடிப்பேன் என ஆனந்தராஜ் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு வழியாக நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தது. தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த நடிகர் ஆனந்தராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நல்லது செய்யும் அணி கண்டிப்பாக வெற்றிபெறும். யார் வெற்றிபெற்றாலும் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு கல்வெட்டு வைக்கும்போது நடிகர் சங்கம் என்ற பெயரைக் கடந்து, இன்னார் திறந்தார், அவர் திறந்தார், இவர் திறந்தார் என கல்வெட்டில் ஏதாவது எழுதியிருந்தால், ஒரு கடப்பாறையை கொண்டு வந்து நானே அந்தக் கல்வெட்டை உடைத்து நொறுக்கி விடுவேன். ஏனென்றால் இந்தக் கட்டிடம் கட்டும் முயற்சியில் அனைத்து நடிகர்களின் பங்கும் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,192.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.