சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்தரும், சாலை மரங்களுக்கு நீர் வார்க்கும் இனிய மழையைப் போற்றிக் கொண்டு, போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் சொகுசாக பயணிக்கிறார்கள். 08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மெல்லிய தூரல் முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, மாம்பலம், அசோக்நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, எழும்பூர், வேப்பேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, அண்ணாசாலை, கே.கே. நகர், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வதில் சிரமம், போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக எதிர் கொள்கிறார்கள். அப்பா! காவல்துறைக்காரன் தொல்லை இருக்காது. எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும், எதிர்த்துப் பேசுதல், காவல்துறையை செயல்பட விடாமல் தடுத்தல் போன்ற காரணங்கள் அவர்களுக்கு திருப்பதி இலட்டு கிடைத்த மாதிரி. மேலும் அதிக அபராதத்தை காரணமாகக் காட்டி 100,200 பிடுங்கி விடுவார்கள்; நிலத்தடி நீர்தரும், சாலை மரங்களுக்கு நீர் வார்க்கும் இனிய மழையால் தப்பித்தோம் என்று சாலைப்பயணிகள் உற்சாகம் அடைகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.