09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நூறாவது நாள் அமைதி போராட்டம், காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக்கப் பட்டு ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலளார் ராஜீவ் கவுபா தமிழக தலைமை செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தூத்துக்குடியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து அவர் கேட்டறிந்தார். தேவைப்பட்டால் தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்பி அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்தியப் படைகள் தயாராக இருப்பதாகவும் ராஜீவ் கவுபா கூறியுள்ளார். தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் உள்துறை அமைச்சக செயலாளர் கவுபா தெரிவித்துள்ளார். இந்த உற்சாகத்தில் தமிழக காவல்துறை இன்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதால், தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் காளியப்பன் என்ற 22 அகவை இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இதனிடையே. தமிழக காவல்துறையால் முடியவில்லை என்பதால் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று துணை ராணுவத்தை நடுவண் அரசு அனுப்புகிறது. என்ற தகவலை காவல்துறை வட்டாரத்தில் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டையும் நடுவண் அரசையும் கண்டித்து ராகுல் காந்தி தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



