09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா சல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டம் வெற்றி அடைந்த போதும், போராட்டக்காரர்கள் ஒவ்வொரு உரிமைக்கும் போராட முயன்றால் தமிழர் விரைவில் அனைத்து உரிமைகளையும் போராடியே படிப்படியாகப் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் காவலர்களை வைத்;து, அவர்களே காவல் நிலையத்திற்கு தீயிட்டுக் கொண்டு, பழி போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டு பன்னீரை வைத்து தமிழ் விரோத சக்திகளால் அரங்கேற்றப் பட்டு சல்லிக்கட்டு போராட்டம் அசிங்கப் படுத்தப் பட்டது. பன்னீர்தானே அதை அரங்கேற்றினார். அதே சூத்திரம் தூத்துக்குடியில் பின்பற்றப் பட்டிருக்கிறது. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்கள் தன்னிச்சையாக நடத்துகிற போராட்டத்தின் நோக்கம் தீர்வுக்கானது. அறிவார்ந்த தமிழ்மக்கள் தீர்வு வரை போராடுவார்கள். சல்லிக்கட்டு போராட்டத்திலே நீங்கள் செய்த அசிங்கத்தால் போராட்டம் முடித்துக் கொள்ளப் படவில்லை. தீர்வு கிடைத்ததால் போராட்டத்தை முடித்துக் கொண்டார்கள். நீங்கள் செய்த அசிங்கம் தனிக்கதையாகத்தான் நின்றது. உலகம் அதை மதிக்கவில்லை. எம்தமிழர் போராட்ட அழகியலில்தான் உலகம் வியந்தது. நீங்கள் செய்த அசிங்கத்ததை பெருமையாக நினைத்துக் கொண்டு அதே சூத்திரத்தைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழ்மக்கள் போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தீர்களே! சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீர்வு கிடைத்ததே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழ்மக்கள் போரட்டத்தில் தீர்வே கிடைக்காமல் போரட்டத்தை உங்கள் அசிங்கத்தைக் கண்டு முடித்துக் கொள்வார்கள் என்று எப்படி யோசித்தீர்கள்? உங்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு புறநானூற்றுத் தமிழர்களாக மார்பைக் காட்டினார்கள் இல்லையா? புறநானூற்றில் தாய் களம் வென்று வாடா என்று அனுப்பி வைத்தாள். இன்று தாயும் அல்லவா போராட்டக் களத்தில் இருக்கிறாள். இதுவரை நீங்கள் அரசியல் கட்சிகளின் போராட்டத்தையே கையாண்டவர்கள். தமிழ்மக்கள் போராட்டம் குறித்து நீங்கள் அறியமாட்டீர்கள். அரசியல்கட்சிகளின் போராட்ட நோக்கம் தீர்வல்ல. ஒரு போராட்டம் நடத்தப் பட்டது என்கிற கணக்கு மட்டுந்தாம். நீங்கள் கைது செய்து விடுதலை செய்வதோடு போராட்டம் முடிவுக்கு வந்து விடும். தீர்வைப் பற்றியெல்லாம் கவலையில்லை. தமிழ்மக்கள் ஒருபோராட்டத்தை கையில் எடுக்க மாட்டார்கள் எடுத்தால் முடிக்காமல் நிறுத்த மாட்டார்கள் என்பதற்கு சல்லிக் கட்டுப் போராட்டத்தை அடுத்து இது இரண்டாவது சான்று. இனி ஸ்டெர்லைட் ஆலை நடக்குமா? சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் போராட்டத்திற்கான தீர்வு கிடைத்து விட்டது. போரட்டத்திற்கு அவர்கள் கொடுத்த ஏறத்தாழ 13உயிர்கள் என்கிற விலைதான் மீளாது. அரசிடமிருந்து பாதிக்கப் பட்ட தமிழ்மக்களுக்கு உரிய இழப்பீடு எடப்பாடி அரசால் சாத்தியப்படாது; செருப்பால் அடித்து கருப்பட்டி கொடுத்ததாக இருக்கும்;. எடப்பாடி அரசு விலகி புதிய அரசால் வழங்கப் படும் நியாயமும், இழப்பீடும்தாம் உண்மையானதாக இருக்க முடியும். எதிர்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு! அதை உருப்படியாக நிறைவேற்றுங்கள். மாண்டவர்களுக்கு சுற்றுச்சூழல் தியாகிகளாக பட்டயமும் அவர்தம் குடும்பத்தாருக்கு உதவித்தொகையும் வழங்குங்கள். எடப்பாடி பன்னீரை அரசாட்சியை விட்டு இறக்காமல் ஓயக்கூடாது செய்வீர்களா? வைகோஐயா, ஸ்டாலின், விஜய்காந்த், முத்தரசன், வேல்முருகன், அன்புமணி, சீமான், கேட்கவில்லை- உரக்கச் சொல்லுங்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



