Show all

பொதுமக்களே எதிர்ப்பு அதிமுக-பாஜக கருத்துப்பரப்புதலுக்கு! எதிர்பார்த்ததுதானே: அதிமுக-பாஜக அசட்டை; மக்கள் தீர்ப்பு எதிர்பாராததாக அமையுமா

காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக பாஜகவினருக்கு சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பு.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூரில், 'இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அதிமுக-பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என சுவரொட்டி ஒட்டியிருப்பது மாபெரும் கூட்டணிக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, பட்டுகோட்டையார் நகர் என பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அதிமுக-பாஜகவினருக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவிற்கு தொடர்பு, மேலும் பாஜக ஆட்சியில் அரங்கேறும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஆகியவற்றை மனதில் வைத்து மக்கள் இவ்வாறு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் மேலும் சில இடங்களில் திருப்பூர் பனியன் தொழிலை நாசமாக்கிய அதிமுக-பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் சரக்கு-சேவைவரி, பணமதிப்பிழப்பால் வந்த எதிர்ப்பு என தெரிகிறது. ஆனால் அதிமுகவினரோ எல்லாம் எதிர்பார்த்தது தானே என்பதாக, சுணக்கம் இல்லாமல் கலக்கி வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.