தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமையன்று (19.05.2019) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. மற்ற மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுடனேயே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அண்மையில் சென்னை வந்த தேர்தல் ஆணையர்கள், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில், தற்போது சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள அந்தப் பேரவை தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 4 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலின் 7வதுகட்ட வாக்குப்பதிவு நாளான 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமையன்று (19.05.2019) சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறும். 4 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டும் இந்த மாதம் பொதுத் தேர்தலுக்கும், அடுத்த மாதம் தாங்கள் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்களிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.