16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் விவகாரத்தில், வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும். தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார். கோடிக்கணக்கில் செலவு செய்து தொடங்கப்படும் ஆலைகளை இவர்கள் விருப்பத்திற்கு எல்லாம் மூடுவது சாத்தியமில்லை. தமிழகத்திற்கு நடுவண் அரசு கொண்டு வரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள். என தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறிவந்த பொன்.ராதாகிருஷ்ணன், திடிரென்று ஸ்டெர்லைட்டை மூடமுடியாது என்கிறாரே? என்று தமிழக மக்கள் குழம்புகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,772.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



