Show all

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்! தலைப்பை மாற்றிக் கொண்ட சன்தொலைக்காட்சி

நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் தொலைக்காட்சி மடைகளில் சன்தொலைக்காட்சி மடைக்கு என்று நிறைய சிறப்புகள் உண்டு. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதலாவது காட்சிமடை சன் தொலைக்காட்சி மடையாகும். 

தமிழிலேயே உருவாக்கப்பட்ட நாடகங்களை முதலாவதாக வெளியிட்ட பெருமையும் சன் தொலைக்காட்சி மடைக்கு உண்டு. 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கப்பட்டதுதான் இந்த சன்தொலைக்காட்சி மடை. தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று ஐரோப்பிய சார்புநிலைக் கேட்பாட்டிற்கு திமுக ஆதரவு தெரிவித்ததோடு அதை சட்டமாகவும் ஆக்கியது. பின்னர் வந்த அதிமுக செயலலிதா அரசு மீண்டும் அதை பார்ப்பனிய சார்புநிலைக் கோட்பாடு என்று கருதப்படுகிற சித்திரை ஒன்றுக்கு மாற்றியது. ஆனால் சித்திரை1 தமிழ்ப்புத்தாண்டு- 5121ஆண்டுகளாக தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு வரும் தமிழர்தம் வரலாற்று அடையாளமே.

ஆக தமிழ்ப்புத்தாண்டு- திமுக, அதிமுக முன்னெடுத்த புத்தாண்டுகளாக வரலாறு சுருக்கப்பட்ட நிலையில்- தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கப் பட்ட சன்தொலைக்காட்சி மடை தானும் தமிழ்ப்புத்தாண்டு வரலாற்று அடிப்படையைத் தொலைத்துவிட்டு, சன்தொலைக்காட்சி மடைக்கான ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்கி கொண்டாடத் தொடங்கி விட்டது. நாளை மறுநாள் சன் தொலைக்காட்சி ஆண்டுக்கணக்கின் 27வது பிறந்த நாளாகும்.

இந்தத் தமிழ்ப்புத்தாண்டு நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமையில் பிறக்கிறது. வாய் மட்டும் சிவப்பாக அல்ல வாழ்க்கையே சிவப்பாகிப்போன கொரோனா ஆண்டாக இந்த முறை தமிழ்ப்புத்தாண்டு நாளை மறுநாள் பிறக்கவிருக்கிறது. இது தமிழகத்திற்கு மட்டும் வாழ்க்கை சிவந்த நாள் அல்ல; ஒட்டுமொத்த உலகத்திற்கே சோகச்செந்நாட்களில் சிறப்பில்லாமல் பிறக்கும் ஒரு நாளே.  

தமிழகத்தின் தொழிலாளர் எண்ணிக்கையில் எண்பது விழுக்காடாக இருக்கிற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு- வேலையும் இல்லை, தொழிலும் இல்லை, வருமானமும் இல்லை, ஊரடங்கால் முடங்கிப் போன அவர்களுக்கு உரிய நிவாரணமும் இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் பெயருக்கு இருக்கிறது. ஆனால் அதில் முறையான பட்டியலும் இல்லை. கட்டமைப்பும் இல்லை. செயல்பாடும் இல்லை என்பது மட்டும் உண்மை. 

தமிழகத்தில் குடும்ப அட்டை அடையாளம், தொழிலாளர் நலவாரிய அடையாளம் இரண்டையும் முறையாகப் பேணமுடிந்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பிற்கும் முறையான நிவாரணம் அளித்து விட முடியும். இந்த இரண்டு இடங்களிலும், முறையான நிரந்தரப் பணியுள்ளவர்கள், பெருமுதலாளிகள், வருமானவரி பதிகை செய்வோரின் ஆதிக்கம் இல்லை. ஆனால் அரசு இவைகளை முறைப்படுத்தி வைக்காமல் கொரோனா ஊரடங்கால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நிவாரணம் வழங்குவது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், ஊரடங்கு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதனைப் பயன்படுத்தி பல்வேறு தொலைக்காட்சி மடைகளும் புதிய படங்களையும், பழைய வெற்றிப் படங்களையும் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாளை, நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

என்னவென்றால், தொடர்ச்சியாக 5 படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு கத்திசண்டை, 12 மணிக்கு ரமணா, 3 மணிக்கு மீசைய முறுக்கு, 6,30 மணிக்கு சீமராஜா மற்றும் 9.30 மணிக்கு வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

சன்தொலைக்காட்சியின் பசுமைப்பிறந்த நாளில் காலை 9.30 மணிக்கு கலகலப்பு 2, 12.30 மணிக்கு காப்பான், 3.30 மணிக்கு டகால்டி, 6.30 மணிக்கு தர்பார் மற்றும் இரவு 9.30 மணிக்கு நண்பேன்டா ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. 

இது தொடர்பான விளம்பர முன்னோட்டங்கள் தொடர்ச்சியாக சன் தொலைக்காட்சி மடையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், படங்கள் ஒளிபரப்புக்கென்று தொடங்கப்பட்ட காட்சிமடைகளைத் தாண்டி இதர காட்சிமடைகளில் இப்படியான ஒளிபரப்பு இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.