தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மொத்தம் 7176 மாதிரிகள் கொரோனா பரசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமாக 94871 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 41 கொரோனா சோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் அன்றாடம் அதிக கொரோனா சோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எல்லாம் பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் போல இன்றும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே. நேற்று குணமடைந்தோர் விழுக்காடு 54 ஆக இருந்த நிலையில் இன்று 57 உயர்ந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



