Show all

பாமக போராட்டம் விரைவில்! சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அறங்கூற்றுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி

பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், அறங்கூற்று மன்றங்களில் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம். அதற்கான போராட்டம் முன்னெடுக்கவும் முடிவு.

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில், பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடந்தது. 

அக்கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ், சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த அறங்கூற்றுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பொதுக்குழுவின் நிறைவில் கீழ்க்கணட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
(!)உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் நியமனத்தில் தமிழகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.
(!)உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவராக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்கவேண்டும்.
(!)உச்சஅறங்கூற்றுமன்ற மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
(!)சென்னை அறங்கூற்றுமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,193.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.