தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு கதைத்தலைவியாக, மலையாள திரையுலகை, ஒற்றைக் கண்ணடிப்பில் கலக்கிய நடிகை, மஞ்சு வாரியார் நடிக்கும் அசுரன். 09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகனின் சாவுக்கு பழிவாங்க ரத்தம் தெறிக்க வீச்சறுவாளுடன் புறப்படும் அசுரனாக தனுஷ் தோன்றும் படம்தான் அசுரன். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை மையப்படுத்தி தயாராகி வரும் படம் இது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு கதைத்தலைவியாக, மலையாள திரையுலகை, ஒற்றைக் கண்ணடிப்பில் கலக்கிய நடிகை, மஞ்சு வாரியார் மற்றும் சகீலா இருவரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அதாவது அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என்று. வடசென்னை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘அசுரன்’. வேளாண்மையை மையப்படுத்திய சாமனியனின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘அசுரன்’ தயாராகி வருகிறது. இவர்களுடன் பசுபதி, ’ஆடுகளம்’ நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில், ’காதல்’ ‘கல்லூரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் காளையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,193.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.