Show all

‘திரும்பிப் போ மோடி’ ஏன்! ஓவியா விளக்கம்

எதிர்ப்பாளர்களுக்கு, ஓவியா சிறப்பான பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது கொண்டாடிகள் கருத்து கூறி, ஓவியாவின் பதிவை மிகுதியாக பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் ஓவியா?

08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் ‘திருப்பிப்போ மோடி’ கீச்சுவில் தலைப்பாவது வழக்கம். அண்மையில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திருப்பிப்போ மோடி’ என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். 

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் போட்டி நிகழ்ச்சியில் ஓவியா பேரறிமுகமானதிலிருந்தே அவர் மீதான பகையை முன்னெடுத்து வருபவர்தான் நடிகை காயத்ரி ரகுராம். உலகத்தமிழர்களே ஒன்றுகூடி இழுத்த இந்த ‘திருப்பிப்போ மோடி’ தேர்ப்பயணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான இந்த ஓவியாவை, இந்த வகைக்கு கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம் நடவடிக்கை, பொறாமை காரணமான முன்பகையாகவே பார்க்கப்பட்டது. ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா ஆட்கள் சிலர், தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வின் சுழியம் குற்றப் பிரிவிலும் புகார் அளித்தனர். 

தனக்கு எதிரான இந்த, பாஜக ஆதரவாளர்கள் சிலரின் எதிர்ப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார். கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது கொண்டாடிகள் கருத்து கூறி, ஓவியாவின் பதிவை மிகுதியாக பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.