Show all

நாம்தமிழர் கட்சி அதிமுக கூட்டணிக்கு வரலாமா!

தேமுதிகவைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி பாஜக கொள்கைகளுக்கான அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தேமுதிக வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. நாம்தமிழர் கட்சி அதிமுக கூட்டணிக்கு வரலாமா ஓர் அலசல்.

09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த நூறு நாட்களில் தமிழகத்தில் அமையப்போகும் ஆட்சி யாருடையதாக இருக்கும் என்ற கேள்விக்கான விடையை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர் நோக்கி நிற்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்- முதலாவதாக, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று எழுதப்படுவதற்கும், இரண்டாவதாக இந்தியாவின் ஆட்சி மொழிகள் அட்டவணை எட்டில் குறிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22மொழிகள் என்று எழுதப்படுவதற்கும், மூன்றாவதாக இந்தியாவில் செம்மொழித் தகுதி பெற்ற முதலாவது மொழி, ‘தமிழ்’ என்று எழுதப்படுவதற்கும், நான்காவதாக சமூக நீதி இட ஒதுக்கீடு ஆகியன வரையறுக்கப்பட்டு என்று எழுதப்படுவதற்கும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தாய்அமைப்பான நீதிக்கட்சியின் பங்களிப்பு எண்பது விழுக்காட்டிற்கும் மேலானது என்று குறிப்பிட்டால் அது ஒருபோதும் மிகையாகாது.

இந்தியா விடுதலை காலத்தின் போது இந்தியாவில் நீதிக்கட்சி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமானால் 90விழுக்காட்டு மக்கள் அடிமைகளாகவும் பத்து விழுக்காட்டு வேதப்பார்ப்பனியர்கள் மற்றும் கார்ப்பரேட்டு பார்ப்பனியர்கள் அதிகாரத்தில் உலாவரும் ஆட்சி இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருந்திருக்கும். 

அந்தவகைக்கான ஆசை நிறைவேறாமல் போன நிலையில், அந்த ஆசையோடு காங்கிரசில் அதிகார மையத்தில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது பாஜகவில் இருந்து கொண்டு, ஒன்றிய ஆட்சியில் எதிர்ப்பில்லாத பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டு, அந்த வகைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒட்டு மொத்தமாக மாற்ற முடியாது என்கிற நிலையில், ஒவ்வொரு கிளையாக வெட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மொட்டை மரமாக்கி அப்புறம் ஒட்டுமொத்த மாற்றத்தை முன்னெடுக்கும் வகைக்கு அங்குலம் அங்குலமாக காய் நகர்த்தி வருகின்றார்கள்.

சிறு முதலாளிகளை வீழ்த்திட பணமதிப்பிழப்பு சரக்கு சேவைவரி, கார்ப்பரேட்டு பார்ப்பனியர்களுக்கு இந்தியா முழுவதும் கூலியாட்களை அமர்த்தித்தர ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, எந்த மாநிலத்திற்கும் தனிச்சிறப்பு இனி கூடவே கூடாது என்பதற்கு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத்தகுதி நீக்கம், தற்சார்புடன் வருமான வரி வரம்புக்குள் எல்லாம் வராமல் தனித்துவமாக இயங்கி வருகிற வேளாண் துறையை- ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டு பார்ப்பனியர்களுக்கு கையளிக்க மூன்று வேளாண் சட்டங்கள், மருத்துவத்துறையில் தனித்துவமாக இந்தியாவின் ஒரே மாநிலமாக கொடிகட்டிப் பறக்கிற தமிழகத்திடம் இருந்து அவைகளைப் பிடுங்க நீட் தேர்வு.

இப்படி அந்த வகைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒட்டு மொத்தமாக மாற்ற முடியாது என்கிற நிலையில், ஒவ்வொரு கிளையாக வெட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மொட்டை மரமாக்கி அப்புறம் ஒட்டுமொத்த மாற்றத்தை முன்னெடுக்கும் வகைக்கு அங்குலம் அங்குலமாக காய் நகர்த்தி வருகின்றார்கள் பாஜகவின் வேத மற்றும் கார்ப்ரேட் கும்பல்
  
இந்த வரலாறு தெரிந்த, இந்த வரலாறுகளுக்குச் சொந்தமான, இந்த வரலாற்று அடிப்படையில் இந்தியாவில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்று நமக்குத் தெரிந்திருக்கிறதோ இல்லையோ பாஜகவை ஆக்கிரமித்திருக்கும் பத்து விழுக்காட்டு வேதப்பார்ப்பனியர்கள் மற்றும் கார்ப்பரேட்டு பார்ப்பனியர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

அதனால்- வருகிற பதினாறாவது சட்டமன்றத்தில் தமிழக ஆட்சியை ஏற்க ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாய்ப்புள்ள திமுகவை முறியடிக்க வேண்டியது பாஜகவில் ஆக்கிரமித்திருக்கிற பத்து விழுக்காட்டு வேதப்பார்ப்பனியர்கள் மற்றும் கார்ப்பரேட்டு பார்ப்பனியர்களுக்கு காலத்தின் கட்டாயமாகும்.   

தற்போதைய நிலவரப்படி, பதினாறாவது சட்டமன்றத்தில் தமிழக ஆட்சிக்கு முனையும் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. 

பதினாறாவது சட்டமன்றத்தில் தமிழக ஆட்சிக்கு முனையும் திமுகவைத் தோற்கடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற பாஜக கூட்டணியில், அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இடங்கள் ஒதுக்கீடு நடக்கும்போது, இதில் பல மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த முறை பாஜக கூட்டணியில் அதிமுக 170-172 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு 20 இடங்கள், பாமகவுக்கு 22, தேமுதிகவுக்கு 10, தமாகவுக்கு 5, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு இடங்கள், தவிர பேராசியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரவிருக்கிறது. அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் தொடர்ச்சியாக சசிகலாவை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்த முறை உறுதியாக இடம் கிடையாது என்ற நிலை இருக்கிறது.

பாஜக முதலில் 40 இடங்கள் கேட்டு பிறகு முப்பது இடங்களுக்கு வந்து நின்றார்கள். ஆனால், அதிக இடங்களை வாங்கி தேவையில்லாமல் திமுக வெல்வதற்கு வழிவகுத்துவிடாதீர்கள். பாஜக வேட்பாளரைவிட, அதிமுக நிற்கும்போது திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என முதல்வர் சொன்னதும் பாஜகவினர் ஓரளவுக்கு இசைந்துவந்திருக்கின்றனர். 

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 72 தொகுதிகளில் 30,000-க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றனர். 22 தொகுதிகளில் 40,000-க்கும் அதிகமாகவும் 10 தொகுதிகளில் 50,000-க்கும் அதிகமாகவும் வாங்கியிருக்கின்றனர். 80 தொகுதிகளில் 15-20 ஆயிரம் வாக்குகளையும் 50 தொகுதிகளில் 5-10 ஆயிரம் வாக்குகளையும் வாங்கியிருக்கின்றனர். ஆகமொத்தம், 100 தொகுதிகளில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பாமகவின் வாக்குகளே இருக்கின்றன. அவர்கள், எங்கள் கூட்டணியில் இருப்பது எங்களுக்குக் கூடுதல் பலம்தான்.

ஆனால், தேமுதிக எங்கள் கூட்டணியில் நீடிப்பதை துணை முதல்வர் விரும்பவில்லை. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், திமுகவுக்கு ஓட்டுப் போட்டு வெல்லவைக்கும் அவர்கள் நம்முடன் எதற்கு என முழுக் கடுப்பில் இருக்கிறார். ஆனால், முதல்வர்தான் தேவலாம் இருந்துவிட்டுப் போகட்டும் எனச் சொல்லியிருக்கிறார். என்பதாக பாஜக கூட்டணிக்கட்சிகள் குறித்து நிலவரம் தெரியவருகிறது.

அதேவேளையில், நாம் தமிழர் கட்சியுடனும் பேசிவருகிறோம். அவர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வாக்குகள் இருக்கின்றன. இழுபறியாக இருக்கும் இடங்களில் அந்த வாக்குகள் எங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என நினைக்கிறோம். தேமுதிகவைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தேமுதிக வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

பாஜக தலைமையேற்கும், அதிமுக கூட்டணிக்கு, நாம்தமிழர் கட்சி வரலாமா என்பதே இங்கே நாம் முன்னெடுக்கும்  ஆய்வாகும்.

நாம்தமிழர் கட்சி, தமிழகத்திற்கு, காலத்தின் தேவையாக உள்ள கொள்கைகளை முன்னெடுத்து வருவது நூறு விழுக்காடும் சரியாகும். அந்தக் கொள்கைகள் திமுகவின் செயல்பாட்டுக் குறைபாடுகளில் முகிழ்க்கிறவை என்றாலும், அதை திமுகவே முன்னெடுத்திருக்க வேண்டும் என்று குற்றம் சுமத்த முடியாது. திமுக காலத்திற்கு ஏற்ப கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக மாறதிருப்பதுதான் நாம்தமிழர் கட்சி இருப்புக்கான அடிப்படையே ஆகும். 

ஒரு விதத்தில் திமுக நாம்தமிழர்கட்சியின் கொள்கைகளுக்கான வேர் ஆகும். அதிமுகவிற்கும் திமுகதான் வேர் என்றாலும் கொள்கைகளில் அதிமுக பாஜகவரை என்பதாக நிறைய வழுவி விட்டது. 

நாம்தமிழர் கட்சி, மதிமுக போல, திமுக கூட்டணியில் இடம் பெற்றால், மதிமுகவிற்கு ஏற்பட்டது போல, சிலபல சுயமரியாதைச் சிக்கல்களுக்குக் காரணம் ஆகலாமேயன்றி கொள்கைக்கு கேடு வராது. 

ஆனால் நாம் தமிழர் கட்சி, பாஜகவரை கொள்கையில் பயணப்பட்டு விட்ட அதிமுக கூட்டணியில் இணைந்தால் கரையான் வேர்அரித்த மரமாய் வீழ்ந்து மடியும். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நாம்தமிழர் கட்சி தனித்தே இயங்கலாம். நாம் தமிழர் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அந்த எதிர்காலம் திமுகவின் வழையடி வாழையாக அமைய வேண்டும். கரையான் வேர்அரித்த மரமாய் வெளிக்குத் தெரியாமல் அதிமுக போல காட்சி அளிப்பதில் நாம்தமிழர் கட்சிக்கோ தமிழ் மண்ணுக்கோ பயன் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.