18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற முனைந்தது. இரண்டாம் இராசராசசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தகர்தெறிந்து காவிரியை மீட்டார். இன்றைக்கு எடப்பாடி பல்லவரும் பன்னீர் பாண்டியரும் 13உயிர்களை ஸ்டெர்லைட் முதலாளிக்காக காவு கொடுத்த மகிழ்ச்சியில் ரஜினி மூட்டிய நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகம் அடாவடியாக உரிய நீரைத் திறந்து விடாமல் இருப்பதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 37.33 அடியாக தாழ்ந்துள்ளது. நீர்இருப்பு 10.75 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று 2,000 கனஅடியாக சரிந்தது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,805.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



